பிக்பாஸ் சீசன் 6  

விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் சீசன் ஆறாம் நிகழ்ச்சி கூடிய விரைவில் வர இருக்கிறது.இதற்கனா விளம்பரங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டன.

இப்போது தான் தமிழில் ஆறாவது சீசனை எட்டி இருக்கும் நிலையில் இதன் லோகோ டிசைன் அறிமுக படுத்த பட்டுள்ளது.யாரெல்லாம் பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக கலந்து கொள்ள போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கின்றனர்.இந்த நிலையில் நமக்கு வந்த தகவலின் படி யாரெல்லாம் பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்து கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.

1.ஶ்ரீநிதி- இவர் சீரியல் நடிகை, அதை விட இவர் சமூக வலைத்தளத்தில் எதையாவது சொல்லி அடிக்கடி டிரென்டில் இருப்பவர் எனலாம்.

2.தர்ஷா குப்தா - இவரும் சீரியல் நடிகை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் ஆனவர்.

3.ராஜ லட்சுமி - இவர் தனது பாடலால் பிரபலம் ஆனவர், இடையில் விஐய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

4.பூனம் பாஜ்வா - இவரை கண்டிப்பாக எல்லாருக்கும் தெரிந்து இருக்கும், நிறைய திரைப் படங்களில் நடித்து இப்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

5.கிரண்- இவரையும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள், ஜெமினி படத்தில் ஹிட் ஆன நடிகை.

6.பவித்ரா- குக் வித் கோமாளயில் புகழுக்கு ஜோடியாக வந்து பிரபலம் ஆனவர், ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார்.

7.ஜேக்ளின்- விஜய் டிவி தொகுப்பாளினியாக இருந்தவர், அதன் பின் இரண்டு சீரியல்களில் நடித்து இருந்தார்.

8.டிடி- இவரை கடந்த சில வருடங்களாகவே பிக்பாஸில் கலந்து கொள்ள போவதாக பிக்பாஸ் ரசிகர்கள் எதிர் பார்த்து கொண்டு இருந்தனர். இந்த சீசனில் இது நிறைவேறும் என்று எதிர்பார்ப்போம்.

9.அம்மு அபிராமி - இவர் பல திரைப் படங்களில் நடித்து இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து இன்னும் கூட பிரபலம் ஆகினார்.

10.ரக்சன்- விஜய் டிவி தொகுப்பாளரான இவர் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்திலும் நடித்து இருக்கிறார்.

11.சந்தோஷ்- சார்ப்பேட்டா படத்தில் நடித்து பிரபலம் ஆன இவர் அதற்கு முன்பே சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.

12.அஜ்மல்- கோ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பெரும்பாலும் நெகட்டிவ் கேரட்டரில் நடித்த இவருக்கு ஹீரோ சான்ஸ் கிடைக்க வில்லை.

13.அஸ்வின்- குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கியின் மூலம் பிரபலம் ஆனவர். அதன் பின் ஹீரோவாக இரு படங்கள் நடித்து இருந்தார்.

14.தர்சன்- கனா படத்தின் மூலம் அறிமுகம் ஆகி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் ஆனார்.