விஜய் தேவர் கொண்டாவின் லைகர்

நடிகர் விஜய் தேவர் கொண்டா தெலுங்கு திரை உலகில் அறிமுகம் ஆனார்.இவர் ஆரம்ப காலத்தில் சிறு சிறு படங்களில் நடித்து இருந்தாலும் முதன் முதலில் அர்ஜூன் ரெட்டி திரை படம் தான் தெலுங்கு திரை உலகையும் தாண்டி இவரை தெரிய வைத்தது.

அந்த படத்தின் வெற்றி இவர் தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை கொடுத்தது.முக்கியமாக பெண்களின் க்ரஷ் என்று சொல்லும் அளவிற்கு புகழை கண்டார்.

அதன் பின் அவர் நடித்த திரைப்படங்கள் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் இறங்கி ஓரளவு அவர் இடத்தை தக்க வைத்து கொண்டார்.

கீதா கோவிண்டம், டியர் காம்ரேட், நோட்டா, டேக்சிவாலா, வேர்ல்ட் வேமஸ் லவ்வர் போன்ற படங்கள் தெலுங்கு மற்றும் தமிழ் திரை உலகிலும் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது.

இப்படி இருக்க இந்த மாதம் பெறும் எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் தான் லைகர்.இந்த படம் 106 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பேன் இந்திய திரைப்படம். இவரின் கேரியரில் இதுவே மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்.

இந்த படத்தில் ஹீரோயினாக அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரபல குத்துச்சண்டை வீரரான மைக்கேல் டைசன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஹாலிவுட்டில் இருந்து மைக்கேல் டைசனையே இறக்கி உள்ளார்கள் அப்படி என்றால் படம் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என்றெல்லாம் எதிர் பார்க்க பட்டது.

ஏனெனில் இந்த குத்துச் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அப்படி என்றால் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்க பட்டது.

ஆனால் இந்த படம் வெளிவந்த உடன் கடும் விமர்சனத்தை சந்தித்து.ஆம் படம் எதிர்பார்த்த அளவில் இல்லை எனவும் திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்கிறது எனவும் படம் பார்த்து வந்தவர்கள் கதறி அழுகின்றனர்.

இந்த விமர்சனத்தால் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து இப்படம் எடுக்கப்பட்டது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் பெரும் நஷ்டத்தில் இருப்பதாக தெரிகிறது. லைகர்க்கு வந்த சோதனை.