வெந்து தணிந்தது காடு 

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளி வர இருக்க கூடிய படம் வெந்து தணிந்தது காடு.இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.இந்த படத்தின் ட்ரைலர் ரீலீஸ் ஆகி ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.இதனிடையில் வெந்து தணிந்தது காடு படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடை பெற்று முடிந்தது.கௌதம் மேனன் சிம்பு மற்றும் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் இது மூன்றாவது திரைப்படம் ஆகும்.

இவர்கள் இணைந்தாலே படத்தில் ஒரு மேஜிக் உண்டாகும் அந்த மேஜிக் இந்த படத்திலும் உள்ளது என படத்தின் ட்ரைலரை கண்டாலே தெரிகிறது.எப்போதும் சிம்புவை வைத்து காதல் கதைகளை கையாளும் கௌதம் மேனன் இந்த படத்தை கேங்ஸ்டர் படமாக எடுத்துள்ளார்.

மேலும் இந்த படம் உண்மை சம்பவத்தை தழுவி எழுதியதாகவும் இந்த அடுத்த பாகமும் வரும் என்பதை கௌதம் மேனன் இசை வெளியீட்டில் சொன்னார்.இந்த படத்தில் சிம்புவின் ஜோடியாகபுது முக நடிகை சித்தி இத்னானி நடித்து இருக்கிறார்.

சிம்புவின் அம்மா கதாபாத்திரத்தில் ராதிகா நடித்து உள்ளார்.இந்த படம் கிராமத்து பிண்ணனி கொண்ட ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என கூறி உள்ளனர்.

மேலும் சிம்பு இந்த படத்திற்காக பதினைந்து கிலோ எடை குறைத்து இருக்கிறார்.ட்ரைலரில் பதினைட்டு வயது சிறுவன் போல காட்சி அளிக்கிறார் சிம்பு.

இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் வந்து இருந்தார்.மேலும் சிம்பு வழக்கம் போல் இல்லாமல் இந்த இசை வெளியீட்டு விழாவில் கொஞ்சம் அமைதியாகவே மேடையில் பேசி உள்ளார்.

எப்படியோ சரி படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது கண்டிப்பாக இந்த படமும் இவர்கள் கூட்டணியில் வெற்றி பெறும் என்பதில் எந்த வித ஆச்சரியம் இல்லை.