விக்ரம் வேதா  

ஹிந்தி மொழியில் எடுக்கப் பட்டுள்ள விக்ரம் வேதா படத்தின் வெளி ஆகி பட்டையை கிளப்பி உள்ளது.இந்த படத்தில் வேதாவாக ஹிர்த்திக் ரோஷனும் விக்ரமாக சைவ் அலி கானும் நடித்து உள்ளனர்.

தமிழில் முதலில் எடுக்கப் பட்ட விக்ரம் வேதா படம் பெரிய வெற்றி படமாகும்.விஜய்சேதுபதி வேதாவாகவும் மாதவன் விக்ரமாகவும் நடித்து அசத்தி இருப்பார்கள்.

இந்த படத்தை புஷ்கர் காயத்ரி தம்பதியினர் எடுத்து இருந்தார்கள்.இவர்கள் இதற்கு முன்பு ஓரம்போ, வா குவாட்டர் கட்டிங் படத்தை எடுத்து இருந்தார்கள்.

பெரிய ஹிட் இல்லை என்றாலும் வித்தியாசமான ஜானரில் எடுக்க பட்ட படங்கள்.இதற்கு பின் தான் விக்ரம் வேதா படத்தை கொடுத்து தங்கள் திறைமையை நிரூபித்தார்கள்.

இந்த படத்தின் வெற்றி விஜய் சேதுபதிக்கு ஒரு பெரிய மைல் கல்லாக இருந்தது.கொஞ்சம் வயதான தோற்றத்துடன் ஒரு டானாக நடித்து கலக்கி இருந்தார்.

இதே பாணியில் இப்போது ஹிந்தியில் இந்த படம் எடுக்க பட்டுள்ளது.ஹிந்தியில் சமீப காலமாக எடுக்க பட்ட படங்கள் எதுவும் வெற்றிகளை பெறாமல் தொடர் தோல்விகளை கொடுத்து ஏமாற்றத்தை தந்து கொண்டு இருக்கிறது ஹிந்தி திரையுலகம்.

இதற்கு இன்னொரு காரணம் பாலிவுட் ரசிகர்கள் ஹிந்தி சினிமாவை தொடர்ந்து பைகாட் செய்து கொண்டு இருக்கிறார்கள்.அதனால் பெரிய வரவேற்பை கிடைக்கும் என்று எதிர்பார்த்த படங்கள் தொடர்ந்து தோல்வியை தலுவி கொண்டு இருக்கின்றன.

ஆனால் இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என தோன்றுகிறது.ஏனென்றால் படத்தின் ட்ரைலர் அப்படியே தமிழ் விக்ரம் வேதாவை நியாபக படுத்துகிறது.

ஹிர்த்திக் ரோஷனின் நடிப்பு திகைக்க வைக்கிறது.அவரது ஸ்டைல் மற்றும் சண்டை காட்சிகள் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பொருந்தி உள்ளது.குறிப்பாக அவர் மாடியில் இருந்து குதித்து கத்தியை வைத்து வெட்டும் காட்சிகள் கொடூரம்.மற்றும் சைவ் அலி கான் நடிப்பும் நன்றாகவே உள்ளது.

கண்டிப்பாக இந்த படம் ஹிந்தி திரை உலகில் ஒரு பெரிய வெற்றி படமாக அமையும் என்பதில் ஆச்சரியம் இல்லை.