வாரிசு

தமிழ் நாட்டில் ரஜினிகாந்திற்கு அடுத்த படியாக அதிக ரசிக பட்டாளத்தை கொண்ட நடிகர் தளபதி விஜய்.பெரியோர் முதல் சிறிய குழந்தைகள் வரைக்கும் ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கிறார்.

இவரது படங்களில் ஆக்ஷன் டான்ஸ் காமெடி சென்டிமென்ட் என அனைத்து வகையான மசாலா கலந்த கலவையாக இருப்பதால் இவர் படத்தை தியேட்டரில் காண குடும்பம் குடும்பமாக வருவதுண்டு.

இவர் நடிக்கும் படங்கள் தமிழ் நாட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் பெரிய வரவேற்பு பெறும்.முக்கியமாக தமிழ் நாட்டை அடுத்து கேரளாவில் இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது.

கேரள நடிகர்களுக்கு இணையான ரசிகர்களையும் கொண்டு உள்ளார்.ரஜினிக்கு அடுத்து பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ஓரே தமிழ் நடிகர். இவர் நடித்த வெளிவந்த துப்பாக்கி கத்தி தெறி படங்கள் 150 கோடியையும் அதன் பின் வந்த மெர்சல் சர்கார் 250 கோடியையும் வசூல் செய்தது.

அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வெளிவந்த பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்து மிக பெரிய சாதனை நிகழ்த்தியது.

அதன் பின் கொரனா கால கட்டத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மீண்டும் தமிழ் திரை உலகிற்கு விடிவு காலத்தை கொண்டு வந்தது எனலாம். ஐம்பது சதவீத இருக்கைகளுடன் வெளிவந்த இந்த திரைப்படம் 250 கோடியை வசூல் செய்தது.

அதன் பின் வந்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனைத்தை சந்திருந்தாலும் அந்த திரைப்படமும் 250 கோடியை வசூல் செய்தது.

இவர் இப்போது தெலுங்கு இயக்குனரான வம்சி படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைக்க பட்டுள்ளது. இப்படத்தில் ர்ஸ்மிகா மண்டனா ஹீரோயினாக நடிக்கிறார் மற்றும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடை பெற்று கொண்டு இருக்கிறது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் சில காட்சிகள் இணைய தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

இதை நிறைய பேர் ஷேர் செய்து இணைய தளத்தில் வைரல் ஆக்கி கொண்டு இருக்கின்றனர்.அதனால் படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் இருக்கின்றனர்.