பொன்னியின் செல்வன்

இயக்குனர் மணிரத்னம் சுமார் பத்து வருடங்களாக பொன்னியின் செல்வன் நாவலை சித்தரித்து படம் எடுக்க போவதாக அறிவித்து அது தோல்வியில் போய் முடிந்து இருக்கிறது.

விஜய், மகேஷ் பாபு என முன்னனி கதா நாயகர்களை வைத்து படம் எடுக்க போவதாக சொல்லி பின் ஏதாவது ஒரு பிரச்சினை காரணமாக கால தாமதம் ஆகி பின் அது நடக்காமலேயே முடிந்து விட்டது.

அதன் பின் தான் மணிரத்னம் பெரிய கதா நாயகர்களை வைத்து எடுத்தால் இது நடக்காது என இளம் கதாநாயகர்களை வைத்து எடுக்க முடிவு செய்தார்.அப்படி ஒரு வழியாக எடுக்கப் பட்டது தான் இந்த பொன்னியின் செல்வன்.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி கதாநாயர்களாகவும் ஐஸ்வர்யா ராய், திரிஷா கதா நாயகிகளாகவும் நடித்து இருக்கின்றனர்.

பாகுபலி போன்ற பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப் பட்ட இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த மாதம் தான் இந்த படத்தின் டீஸர் இறங்கி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது.

ஆனால் இந்த படத்தில் மூத்த நடிகரான விக்ரமுக்கு மெயின் கதாபாத்திரத்திம் கொடுக்க வில்லையாம்.

ஆமாம் ஜெயம் ரவியே இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரம், விக்ரம், கார்த்தி இரண்டாம் மற்றும் மூன்றாம் கதாநாயகர்களே‌.

ஏனெனில் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கே அதிக சம்பளம் கொடுக்க பட்டு இருக்கிறது.

இதனால் கார்த்தியும் விக்ரமும் கோபத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

எது எப்படியோ பாகுபலிக்கு நிகராக எடுக்கப்பட்ட இந்த படம் அதன் புகழையும் அடையும் என எதிர்பார்ப்போம். 

ஏனெனில் இந்த படத்தின் வெற்றி தமிழ் சினிமாவிற்கு மட்டும் அல்ல தமிழிற்கும் பெருமை தான்.