பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்ச்  

பிரம்மாண்டமான முறையில் பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்ச் நடந்து முடிந்து உள்ளது.இந்த ஆடியோ லாஞ்ச் ல் பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் வெளியடப் பட்டது.

படத்தின் டிரெய்லர் நிறைய பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.இந்நிலையில் படத்தின் ஆடியோ லாஞ்ச் ற்கு ஏகப்பட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களும் இந்த ஆடியோ லாஞ்ச் ல் கலந்து கொண்டனர்.பின்னர் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகளும் வந்து இருந்தனர்.

நடிகர்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சித்தார்த், விக்ரம் பிரபு,சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், நாசர் ஆகியோர் வந்து இருந்தனர்.நடிகைகளான ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் வந்து இருந்தனர்.

முக்கியமாக படத்தின் இயக்குனரான மணிரத்னம் மற்றும் படத்தின் இசை அமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் அவர்களும் வந்து இருந்தனர்.இதில் மேடையில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் பகிர பட்டன.

அதில் முக்கியமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் மேடையில் பேசியது வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

மேடையில் பேசிய ரஜினி பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும் போது தன்னை வந்திய தேவனாகவும் கமலை அருள் மொழி வர்மனாகவும், விஜயகாந்தை ஆதித்த கரிகாலன் ஆகவும் சத்யராஜை பெரிய பழுவேட்டரையர் ஆகவும் கற்பனை செய்ததாக சொன்னார்.

மேலும் மேடை ஏறிய விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி மனம் திறந்து படத்தை பற்றி ரசிகர்களிடம் பேசினர்.

அதன் பின் ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா மேடையில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததிற்கு மணிரத்னமிற்கு நன்றியை தெரிவித்தார்கள்.

நடிகர் ஜெயராம் மேடையில் மணிரத்னம் போன்று மிமிக்ரி செய்து காட்டி அசத்தினார்.

மேலும் சிறப்பு விருந்தினராக வந்த ஷங்கர் இப்படத்தை பற்றி பேசியதும் அல்லாமல் இந்தியன் 2 படத்தை பற்றியும் பேசி உள்ளார்.

மேலும் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த யுவன் என பல கொண்டாட்டத்துடன் ஆடியோ லாஞ்ச் நடந்து முடிந்தது.