பாக்ஸ் ஆபீஸ்

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் இவர்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் நடிகர்கள்.பொதுவாக சினிமாவில் படத்தின் வசூலை வைத்து தான் அந்த படம் வெற்றி அடைந்ததா அல்லது தோல்வி அடைந்ததா என கூறுவார்கள்.

அந்த வகையில் ரஜினி விஜய் படங்கள் சில சமயங்களில் தோல்வி அடைந்ததாலும் கூட வசூலை வாரி கொடுக்கும். அதற்கு காரணம் அவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளமும் குடும்ப ஆர்டியன்ஸ்ம் தான்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் தற்காலமாக பேன் இந்திய திரைப்படங்கள் நிறைய வர தொடங்கி உள்ளன.

இதற்கு ஆரம்ப புள்ளி இயக்குனர் ஷங்கர். ஆம் அவர் எடுத்த எந்திரன் திரைப்படம் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக வசூலையும் கொடுத்த படம்.

இது பேன் இந்திய படமாகவும் இறங்கியது.இதே போல் தெலுங்கில் ராஜமொளலி எடுத்த பாகுபலி திரைப்படமும் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம்.

அதிக பொருட்செலவில் எடுக்க பட்ட இந்த படம் அதிக வசூலையும் ஈட்டி காலிவுட் சினிமாவின் பார்வையையும் இந்திய சினிமா மீது விழ வைத்தது.

இதே போல் இவர் எடுத்த ரத்தம் ரனம் ரவுத்திரம் படமும் நல்ல வசூல் வேட்டையை நடத்தியது.

ஹீரோக்கள் என்று பார்த்தால் விஜய், மகேஷ் பாபு, அஜித், பிரபாஸ், ராம் சரண், அல்லு அர்ஜுன் என இவர்கள் அனைவரின் படமும் தென்னிந்திய சினிமாவிற்கு நல்ல வசூலை தந்து உள்ளது.

இதில் கடந்த ஐந்து படங்களின் வசூல் என்ற வரிசையில் இவர்களின் படத்தின் வசூலை கீழே காணலாம்.பிரபாஸ்- ரூ. 3115 கோடி, ரஜினிகாந்த் - ரூ. 1864 கோடி, ராம் சரண் - ரூ. 1840 கோடி, ஜூனியர் என்.டி.ஆர் ரூ. 1827 கோடி, யாஷ் - ரூ. 1620 கோடி, விஜய் - ரூ. 1230 கோடி, 

அல்லு அர்ஜுன் - ரூ. 930 கோடி, மகேஷ் பாபு - ரூ. 882 கோடி, அஜித் - ரூ. 813 கோடி  இதில் நடிகர் ரஜினிகாந்த் இரண்டாம் இடத்தையும் நடிகர் விஜய் ஆறாம் இடத்தையும் நடிகர் அஜித் பத்தாம் இடத்தையும் பிடித்து உள்ளனர்.