நடிகை நமீதா கர்ப்பம்

ஒரு காலத்தில் தன் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து அவர்களது மனதில் இடம் பிடித்தவர் நடிகை நமீதா அன்றில் இருந்து தமிழக இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார் நமீதா.

தமிழக திரையுலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த நடிகை நமீதா, தமிழில் ஏராளமான படங்களில் நடித்து கொடி கட்டி பறந்தவர். அதிலும் நமீதாவின் கவர்ச்சி மற்றும் அவரின் கொஞ்சல் பேச்சுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தனது முதல் படமான எங்கள் அண்ணா தலைப்பில் வெளிவந்த நடிகர் விஜயகாந்த் நடித்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா.

அதன் பிறகு உச்ச நட்சதிறங்களான விஜய், அஜித் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடித்த நடிகை நமீதா.

ஒரு கால கட்டத்தில் தனது உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். அதன் பின் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.

அதன் பின் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை நமீதா சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் முகத்தை காட்டினார்.

அதன் பின்னர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் கலந்த கொண்டார். ஆனால் அதிலும் எதிர்பார்த்த அளவில் எந்த வரவேற்பும் கிடைக்க வில்லை.

சில வருடங்களுக்கு பிறகு 2017-ம் ஆண்டு நடிகை நமீதா நடிகர் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது பிறந்தநாள் அன்று சோஷியல் மீடியாவில் அறிவித்தார் நடிகை நமீதா.

அவருக்கு அழகான இரட்டை குழந்தைகள் பிறந்தது அந்த புகைப்படத்தையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.

உங்களின் ஆசியும் அன்பும் எங்களுக்கு என்றும் தேவை என்று தனது சந்தோஷத்தை தனது ரசிகர்களிடம் வெளிப்படுத்தினார் நடிகை நமீதா.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தான் அவருக்கு குழந்தை பிறந்தது.

இந்த மருத்துவமனைக்கு நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பேம் என்று தனது சமூகவலைத்தில் நன்றியை தெரிவித்து உள்ளார்.