கியாரா அத்வானி

நடிகை கியாரா அத்வானி லஸ்ட் ஸ்டோரி என்ற வெப் சீரிஸ் மூலம் பிரபலமாகி பின் எம்.எஸ். தோனி மற்றும் கபிர் சிங் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர்.

இன்று பாலிவுட் இல் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தற்போது வரை பிஸியான முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவரது உடல் வளைவு தோற்றத்திற்காகவே ஏராளமான ரசிகர்கள் பாலிவுட் டையும் தாண்டி கோலிவுட் டோலிவுட் என எல்லா வட்டாரங்களிலும் சம்பாதித்து வைத்திருக்கிறார்.

இருந்தாலும் இவர் தனது கிளாமர், அழகிய தோற்றம் மற்றும் ரசிக்க தக்க நடிப்பினாலும் தன் இருப்பை தக்க வைத்து கொள்கிறார். இன்ஸ்டாகிராமில் இவரது புகைப்படத்திற்காக ஏங்கும் ரசிகர்கள் ஏராளம்.

ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் இவருக்கு போட்டியாக பல முன்னணி மற்றும் பதுமுக நடிகைகள் இருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அப்படி இருக்க நடிகை கியாரா அத்வானி காதல் வலையில் விழுந்ததாக தகவல்கள் கசிந்தது.

பின்னர் பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு காதலித்து வருகிறார்கள் என்று பாலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவிடம் காதலி கியாராவுடன் அவர்களின் காதலை பற்றியும் எப்போது திருமணம் என்றும் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்க்கு பதில் அளித்த சித்தார்த், " நாங்கள் இருவரும் நீண்ட காலமாகவே எங்களுடைய எதிர்கால வாழ்க்கையை திட்டமிட்டு யோசனை கொண்டு வருகிறோம்.

சரியான நேரும் வரும் பொழுது எங்கள் எதிர்கால திட்டங்களை பற்றி நிச்சயமாக தெரிவிப்போம் " என்று பதிலளித்துள்ளார்.

இதன் மூலம் , நடிகை கியாரா அத்வானியுடனானா திருமணத்தை உறுதி செய்துள்ளார் சித்தார்த். இந்த தகவல் தான் தற்போது பாலிவுட் திரையுலகில் டாப் செய்தியாகி வலம் வந்து கொண்டிருக்கிறது.