நடிகை அதுல்யா ரவி  

நடிகை அதுல்யா ரவி டப்மாஸ், குறும்படம் மூலம் சோஷியல் மீடியாவில் பிரபலம் ஆகி இளைஞர்கள் மத்தியில் தன் முகத்தை காட்ட தொடங்கினார்.ஆரம்ப காலத்தில் இவர் நடித்த குறும்படங்கள் இவர் நடிப்பின் திறமையை காட்டியது.

அதன் மூலம் இவர் அடுத்து கட்டத்திற்கு முன்னேர வாய்ப்பு கிடைத்தது.பல திரைப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் தனது என்ட்ரியை கொடுத்தார்.

இந்த படம் பெரிதாக ஓட வில்லை என்றாலும் இந்த படத்தின் காதல் காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆகியது.அது இவருக்கு மேலும் ஒரு படிக்கட்டாக இருந்தது.

அதன் பின் இறங்கிய நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, ஏமாளி, நாடோடிகள் 2, கேப்மாரி மற்றும் அடுத்த சாட்டை போன்ற திரைப்படங்கள் சுமாரான வரவேற்ப்பையே பெற்றது.

இத்தனை படங்கள் இறங்கியும் பெரிதாக வெற்றி காணாத நடிகை அதுல்யா ரவி புதிய யுக்தியை கையாண்டார்.ஆம் வேறென்ன கிளாமரான கேரட்டரில் நடிக்க திட்டம் இட்டார்.

அதன் படி நடிகர் சாந்தனு ஹீரோவாக நடித்த முறுங்கைக்காய் சிப்ஸ் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.இந்த படத்தில் கதையே ஒரு தினுசாக இருக்கும் பட்சத்தில் இவரும் அதற்கு ஏற்றவாறு கிளாமரை வாரி தெளித்து இருந்தார்.

இருந்தும் இந்த படமும் சரியான வரவேற்பை பெற வில்லை காரணம் படத்தில் சொல்லும் படியாக ஒன்றும் இல்லை என்பதாலும் படம் அடல்ட் கண்டண்ட் படமாக இருந்ததாலும் வெற்றி பெற வில்லை.

நடிகை அதுல்யா ரவி பட வாய்ப்பு கம்மியாக இருந்தாலும் இன்ஸ்டாகிரமில் ஆக்டிவாக இருப்பார்.தனது புகைப் படங்களை அவ்வப்போது பதிவிட்டு கொண்டே இருப்பதால் ரசிகர்கள் இவரை இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இவர் தற்போது அவரது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உள்ளார்.பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பின் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி விட்டார்.

தமிழ் நாட்டு முகமாக இருந்தவர் தற்போது பார்பதற்கு பாலிவுட் ஹீரோயின் போன்ற தோற்றத்தில் இருக்கிறார்.எது எப்படியோ இவருக்கு பட நடிக்கும் வாய்ப்புகள் வந்தால் சரி தான்.