கோப்ரா

தென்னிந்திய நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சியான் விக்ரம்.நடிகர் சியான் விக்ரம் அவர்கள் நடிப்பில் வர விருக்கும் விக்ரமின்58வது திரைப்படம் தான் கோப்ரா.

இந்த படத்தில் இவர் 10 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து இருக்கிறார்.இந்த படத்தில் கேஜிஎப் படத்தின் கதாநாயகி ஆன ஸ்ரீநிதி ஷெட்டி, இப்ரான் பதான் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.

மேலும் இப்படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இந்த மாதம் 31 ஆம் தேதி அன்று அனைத்து திரையரங்குகளில் வெளிவருகிறது.

தசாவதாரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். அது இன்று வரை கோலிவுட் மட்டும் அல்லாது இந்திய முழுவதும் பேச பட்டு வருகிறது.

அதன் பிறகு அந்த முயற்சியை நடிகர் விக்ரம் அவர்கள் கையில் எடுத்து இருக்கிறார்.

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு இந்த படம் கண்டிப்பாக வசூல் சாதனை நிகழ்த்தும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் இறங்கும் இந்த படம் சுமார் இரண்டு ஆயிரம் ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்ய படுகிறது.

தமிழ் நாட்டில் மட்டும் 800 திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.ஏற்கனவே முன் பதிவு 1.7 கோடி ரூபாய் அளவிற்கு புக்கிங் செய்ய பட்டு இருக்கிறது.

இந்த படத்தில் விக்ரம் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார்.இதுவே இவர் நடித்த படங்களில் அதிக சம்பளமாம்.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து அந்த படமும் இந்த மாதத்தில் வெளி ஆக உள்ளது.ஆக விக்ரமிற்கு இந்த மாதம் ஜேக்பாட் தான்.